96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அடடே.. வாழ்த்துக்களை குவித்து தள்ளுங்கப்பா.. அப்பாவாகப்போகும் துணிவு வில்லன் நடிகர்.. மனைவிக்கு வளைகாப்பு..!
வில்லன் நடிகரின் மனைவி கர்ப்பமாக இருந்த நிலையில், அவருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.
தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் ஜான் கொக்கன். இவர் கடந்த 2012ல் மீரா வாசுதேவன் என்பவரை திருமணம் செய்த நிலையில், 2016ல் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர்.
அதனைத்தொடர்ந்து, கடந்த 2019ம் ஆண்டு ஜான் கொக்கன் பூஜா ராமச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பூஜா நடிகை மற்றும் விஜே ஆவார். தற்போது தனது இரண்டாவது மனைவியுடன் ஜான் கொக்கன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
இவர் தமிழில் வெளியான பாகுபலி, கே.ஜி.எப்., சார்பட்டா பரம்பரை, துணிவு உட்பட பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், பூஜா இராமச்சந்திரன் தற்போது கர்ப்பிணியாக இருக்கும் நிலையில், அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.