வாவ்... சூப்பர்... நடிகை பிரணிதா சுபாஷ் ரசிகர்களுக்கு கியூட் புகைப்படங்களுடன் கூறிய குட் நியூஸ்...!



Actress pranitha pregancy photo

தமிழ் சினிமாவில் கார்த்தி நடிப்பில் வெளியான சகுனி படத்தில் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரணிதா சுபாஷ். பின்னர் சூர்யாவுடன் மாஸ் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார் .

பின்னர் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், மாஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டில் தெலுங்குத் திரைப்படமான போக்கிரி திரைப்படத்தின் கன்னட மொழியில் நடித்தார். தமிழ் சினிமாவில் இவரது நடிப்பினாலும், அழகினாலும் ரசிகர்களை வெகுவாக கவர்தார். கடந்த ஆண்டு பிரணிதா தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் சமூக  வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக  இருக்கும் பிரணிதா தான் கர்பமாக இருப்பதாக அறிவித்து உள்ளார். மூன்று மாதங்கள் நிறைவடைந்து இருப்பதாக அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்து உள்ளார். மேலும் குடும்பத்தினருக்கு திருஷ்டி உள்ளிட்ட விஷயங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது என்பதால் மூன்று மாதங்கள் முடியும் வரை யாரிடமும் கர்ப்பம் பற்றி அவர் கூறவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் தனது  இன்ஸ்ட்ராகிராமில் கர்ப்பமாக  இருப்பதை  அறிவித்து கணவருடன்  உள்ள புகைப்படங்களை  வெளியிட்டுள்ளார்.