96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
"வாய்ப்பு வேணுமா? வந்து என்னோட அட்ஜெஸ்ட் பண்ணு" - பாரதி கண்ணம்மா நடிகையிடம் போன் போட்டு டார்ச்சர்..! அவரே கூறிய உண்மை..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் தமிழக மக்களிடையே பெரும் கவனத்தைப்பெற்றது பாரதி கண்ணம்மா. இதை வைத்து பல மீம்களும் வெளியாகி இருந்தன. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், டிஆர்பிஇல் உச்சத்தையும் பெற்ற தொடர்களில் இதுவும் ஒன்று.
இந்த தொடரின் முதல் பாகத்தில் பாரதியாக அருள்பிரசாத்தும், கண்ணம்மாவாக வினுஷா தேவியும் நடித்திருந்தனர். பல திருப்பத்தோடு ரசிகர்களை எப்போதும் பரபரப்பாக வைத்து எப்போதுதான் பாரதியையும், கண்ணம்மாவையும் இணைப்பீர்கள்? என்று பல கேள்விகள் எழுந்து தற்போது இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
இரண்டாவது பாகத்தில் அசல் கண்ணம்மாவை கொலைசெய்து விட சித்ரா, கண்ணம்மாவாக மாறி கண்ணம்மாவின் பணிகளை மேற்கொள்கிறார். தற்போது பாரதி - கண்ணம்மா இடையே காதல் மலர்ந்தது போல பல காட்சிகள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் பாரதி கண்ணம்மா தொடரில் மது கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ரேஷ்மா பிரசாத் தனக்கு நடந்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "சின்னத்திரையில் சிறிய அளவில் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்றாலும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய உங்களுக்கு சம்மதம் இருந்தால் கதாபாத்திரம் எளிதில் கிடைக்கும் என்று பலரும் கூறினார்கள்.
பலரும் இதே கேட்டார்கள் என்றதால் உங்களுக்கு வேற வேலையே இல்லையா? என்று நான் வந்துவிட்டேன். அட்ஜஸ்ட்மென்ட் செய்து கிடைக்கும் கதாபாத்திரம் எனக்கு தேவையில்லை. நமக்கு வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.
அவர்கள் கதாபாத்திரம் தொடர்பாக அனுப்பும் விவரத்தில் அட்ஜஸ்ட்மென்ட் ஓகேவா? இல்லையா? என்றும் கேட்பார்கள். நான் ' நோ ' என்று கூறியும் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அட்ஜஸ்மெண்டுக்கு பேசினார்கள்" என்று தெரிவித்தார். இந்த தகவல் சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.