ஜிம் உடையிலும் எம்புட்டு அழகு! நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் ஜிம் ஒர்கவுட் வீடியோ.
தமிழ், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகைளில் ஒருவராக இருப்பவர் நடிகை சமந்தா. நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக பானா காத்தாடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சமந்தா விஜய், விக்ரம், சூர்யா என தமிழ் சினிமாவின் பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார்.
விஜய்யுடன் இவர் இணைந்து நடித்த கத்தி, தெறி, மெர்சல் ஆகிய மூன்று படங்களுமே மாபெரும் வெற்றிபெற்றது. பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட சமந்தா திருமணத்திற்கு பிறகும் படங்களில் பயங்கர பிசியாக நடித்துவருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா தனது ஜிம் ஒர்கவுட் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமந்தாவின் சமீபத்திய ஜிம் ஒர்கவுட் வீடியோ ஓன்று இணையத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.