குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
இரண்டு நடிகர்களின் புகைப்படத்தை பதிவிட்டு நடிகை சமந்தா என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா!
தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சமந்தா. அதனைத் தொடர்ந்து அவர் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வலம்வருகிறார்.
சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் ஆடியிருந்த ஊ சொல்லரியா மாமா பாடலின் நடனம் இணையத்தில் பெரிய அளவில் கிட் அடித்தது. இந்நிலையில் இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், சமீபத்தில் கோவாவிற்கு தனது தோழிகளுடன் ட்ரிப் சென்றிருந்தநிலையில், அங்கு எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலபடுத்தினார்.
மேலும் தற்போது நடிகர் வெண்ணிலா கிஷோர் மற்றும் ராகுல் ரவீந்திரா உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, சமந்தா "நீங்கள் இல்லாமல் நான் என்ன செய்வேன் நண்பர்களே" என கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..