ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
#அதிர்ச்சி : அங்காடி தெரு பட நடிகை திடீர் மரணம்.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
கடந்தசில ஆண்டுகளாகவே புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த துணை நடிகை சிந்து இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
சின்னத்திரை சீரியல்களின் மூலம் சினிமா உலகில் அடியெடுத்து வைத்தவர் தான் நடிகை சிந்து. அதன்பின் அவர் வெள்ளி திரைக்கு பல்வேறு துணை கதாபாத்திரங்களின் மூலம் வந்து பிரபலமானார். அங்காடி தெரு திரைப்படத்தில் நடிகை சிந்து மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மனைவி கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் ஈர்த்தார்.
இது மட்டுமல்லாமல் அடிக்கடி சிறிய கதாபாத்திரங்களில் நடித்து திரை உலகில் தனது இருப்பை உறுதிப்படுத்தினார். வைகைப்புயல் வடிவேலுக்கு ஜோடியாகவும் ஒரு சில படங்களில் சிந்து நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இவர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
இவருக்கு கடந்த 2020ல் மார்பக புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதை ஆரம்பத்தில் அவர் கவனிக்காமல் விட்டதால் பெரிய அளவில் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உடல் முழுவதும் பரவியது. அவரால் வறுமை காரணமாக உரிய சிகிச்சை மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
தனக்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டும் என்று சினிமாத்துறைக்கும் மற்ற நடிகர்களுக்கும் சிந்து கோரிக்கை வைத்து ஒரு நேர்காணலில் பேசி இருந்தது சமீபத்தில் வைரலானது. இந்த நிலையில் சில ஆண்டுகளாகவே புற்றுநோயால் மிகுந்த அவதிப்பட்டு வந்த சிந்து இன்று அதிகாலை 2 மணி அளவில் உயிரிழந்துள்ளார்.