96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பென்குயினுடன் குஜாலாக என்ஜாய் செய்யும் சினேகாவின் குடும்பம்... கொண்டாட்டமோ கொண்டாட்டம்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சினேகா. இவர் நடித்த பல படங்களும் ஹிட்டாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து கடந்த 2012-ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த காதல் தம்பதிக்கு விஹான் என்ற ஒரு மகனும், ஆத்யந்தா என்ற ஒரு மகளும் இருக்கின்றனர். தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை சினேகா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.
அந்த வகையில் தற்போது தனது மகள் மட்டுமின்றி மகன் மற்றும் கணவருடன் விடுமுறையை கொண்டாடி மகிழ்ந்த தருணத்தில் எடுத்த புகைப்படத்தை நடிகை சினேகா பதிவிட்டிருக்கிறார். இதனைகண்ட ரசிகர்கள் இரண்டே வயதாகும் சினேகாவின் மகள் ஆத்யந்தா நன்றாக வளர்ந்துள்ளார் என்று கூறி வருகின்றனர்.