96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அடடே.. நடிகை சினேகா வீட்டில் இப்படி ஒரு விசேஷமா?.. ரொம்ப ஜாலியா இருக்காங்க போல..! தீயாய் பரவும் புகைப்படம்..!!
கோலிவுட்டில் புன்னகையரசியாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை சினேகா. இவர் தமிழில் "என்னவளே" என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இப்படத்தினை தொடர்ந்து அஜித், கமல், விஜய் போன்ற பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2012-ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை, சினேகா காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
மேலும் திருமணத்திற்கு பின் நடிகை சினேகா சில படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்துவரும் நிலையில், தற்போது வெங்கட்பிரபுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார். இது மட்டுமல்லது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ஜோடி டான்ஸ் ரீலோடட் என்ற நிகழ்ச்சியிலும் நடுவராக பணியாற்றுகிறார்.
சமூகவலைத்தளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் நடிகை சினேகா, தனது வீட்டில் வரலட்சுமி பூஜை என்று குடும்பத்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் இந்த பூஜையில் நடிகை சரண்யா பொன்வண்ணன், அருண் விஜயின் மனைவி, மகன், மகள், நடிகை ப்ரீத்தா விஜயகுமார், நடிகர் ஜீவாவின் மனைவி, நடிகை ரம்பா மற்றும் நடிகர் தனுஷின் அக்கா போன்றோர் கலந்து கொண்டனர்.
இவர்கள் மட்டுமல்லாது நடிகை சினேகா பிரசன்னாவின் நண்பர்களும் கலந்து கொண்ட நிலையில், அனைவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.