குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
படவாய்ப்பே கிடைக்கல., கிராமத்தில் செட்டிலான நடிகை ஶ்ரீதிவ்யா..! இவருக்கா இப்படியொரு நிலை?..! வைரலாகும் போட்டோஸ்..!!
தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. அந்த படம் ஹிட்டான பின் ஸ்ரீ திவ்யாவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டானது.
இதனை தொடர்ந்து இவர் ஜீவா, சங்கிலி புங்கிலி கதவ தொற, ஈட்டி, காக்கிசட்டை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது மலையாளத்தில் பிரித்திவிராஜின் ஜனகணமன படத்தில் அவர் நடித்திருந்தார்.
ஆனால் அதன்பின் அவருக்கு பெரிய படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சமீபகாலமாக இணையத்தில் புகைப்படங்களும் வெளியிடவில்லை. தற்போது மீண்டும் இணையத்தில் அவர் புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார்.
அது மட்டுமின்றி அவர் தற்போது இருக்கும் கிராமத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அவர் மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும் என கமென்ட் செய்து வருகின்றனர்.