ரீ -என்ட்ரி கொடுக்கும் சுகன்யா.! ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன நடிகை சுகன்யா..



Actress suganya latest photos viral

1991 ஆண்டு 'புது நெல்லு புது நாத்து' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சுகன்யா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

actress

1990களில் முன்னணி தமிழ் நடிகையாக இருந்த இவர் in bigboss கார்த்திக், கமலஹாசன், சத்யராஜ், விஜயகாந்த், பிரபு என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து முன்னணி நடிகையாக இருந்தார். முறையான நடனம் பயின்ற சுகன்யா, பெரும்பாலும் நடன நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஆர்வமாக இருந்தார்.

அழகு மற்றும் திருப்பதி திருக்குடைத் திருவிழா என்ற பக்தி ஆல்பங்களையும் இயற்றியுள்ளார். மேலும் டப்பிங் கலைஞராகவும் இருந்துள்ளார்.  இந்நிலையில், தற்போது சுகன்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.

actress

ஆனால் இப்போது அவர் நடிக்க வரவில்லை. பாடலாசிரியராக வந்துள்ளார். மலையாள படம் ஒன்றின் தமிழ் காட்சிகளுக்காக சுகன்யா தான் பாடல் எழுத வேண்டும் என்று அப்படத்தின் இசையமைப்பாளரும், இயக்குனரும் கேட்டதால் சுகன்யா இதற்கு ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.