மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பலம் கூடும் சின்மயி! நிலைகுலையும் வைரமுத்து! அடுத்தடுத்து நடக்கும் அதிரடி திருப்பங்கள்!
சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் நபர்கள் வைரமுத்து மற்றும் பாடகி சின்மயி. கவி பேரரசு வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்திருக்கிறார் பாடகி சின்மயி. அவரை தொடர்ந்து பல பெண்கள் சின்மயிக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சின்மயிக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் ஆதரவு குரல் கொடுத்து வந்தாலும், ஒரு சிலர் முரண்பட்ட கருத்தை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் சித்தார்த், சமந்தா, வரலட்சுமி, கஸ்தூரி, ஸ்ரீ ரெட்டி உள்ளிட்டோர் சின்மயிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துஉள்ளனர்.
தற்போது நடிகை ஸ்வர்ணமால்யாவும் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் இந்த பிரச்சனைக்கு சட்ட ரீதியாக ஆலோசனை செய்து வருவதாகவும், எதிர்காலத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் கொடுமை செய்பவர்களுக்கு இந்த சட்ட நடவடிக்கை நல்ல பாடத்தை புகட்டும் என ஆதரவு குரல் கொடுத்து உள்ளார்.
தற்போதைய நிலையில், பாடகி சின்மயிக்கு ஆதரவாக அதரவு குரல் கொடுத்து வருபவர்கள் அதிகமாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.