96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கஞ்சா அடித்த ஹன்சிகா!. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!.
![actress using smoke in new movie](https://cdn.tamilspark.com/large/large_hansiga-15192.jpg)
தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, உச்சத்தில் இருந்தவர் நடிகை ஹன்சிகா. மேலும், கொழுகொழுவென குழந்தை போல் இருக்கும் இவரது அழகிற்கும், துறுறுப்பான நடிப்பிற்கும் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது.
ஆனால், அவருக்கு தற்போது மார்க்கெட் இழந்து, படவாய்ப்புகள் குறைந்து வருகிறது.
இந்த நிலையில் ஹன்சிகா இனி ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.
அதன்படி தனது 50வது படத்தை ஹன்சிகா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரமாக தேர்ந்தெடுத்து நடிக்கின்றார். இப்படத்திற்கு படக்குழுவினர் மஹா என்று டைட்டில் வைத்துள்ளனர்.
மேலும், அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ஹன்சிகா கஞ்சா அடிப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அதை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளர்.