96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
என்ன ஒரு எளிமை.! தலையில் உலக அழகி என்ற வெற்றி கீரிடத்துடன் தரையில் அமர்ந்து உணவருந்திய ஐஸ்வர்யா ராய்..!
கடந்த 1994 ஆம் ஆண்டு நடைப்பெற்ற உலக அழகி போட்டியில் வெற்றி பெற்று அனைவராலும் அறியப்படும் பிரபலமானவர் ஐஸ்வர்யா ராய். அதனை தொடர்ந்து பல படங்கள் மற்றும் விளம்பர படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தமிழில் வெளியான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், இராவணன், ஜீன்ஸ் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது ஐஸ்வர்யா இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது திடீரென அவரின் பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் நடிகை ஐஸ்வர்யா ராய் தான் பெற்ற உலக அழகி பட்டத்தை அடுத்து தனது வீட்டில் தலையில் உலக அழகி கீரிடத்துடன் தரையில் அமர்ந்து தனது தாயுடன் உணவருந்தியுள்ளார். என்ன தான் புகழின் உச்சிக்கு சென்றாலும் அதனை பெரிதாக எடுக்காமல் சதாரண மனிதர்கள் போல் தரையில் அமர்ந்து உணவருந்தியுள்ளார் என ரசிகர்கள் புகழ் வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.