நடிகர் அஜித் பெயரில் வெளியான கடிதம் போலியானது! அஜித்தின் சட்ட ஆலோசகர்கள் விளக்கம்



Ajith gave details about fake letter

எந்தவித சமூக வலைத்தளங்களிலும் தனக்கென எந்தவித அக்கவுண்டையும் தல அஜித் நிர்வகிக்கவில்லை. ஆனால் அவர் பேஸ்புக்கில் இணைய போவதாக குறிப்பிட்ட கடிதம் ஒன்று நேற்று (06.03.2020) வெளியானது.

ஆனால் இந்த கடிதம் போலியானதாக இருக்குமோ. என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. இதற்கு அஜித்தின் ரசிகர்கள் தங்கள் கருத்துகளை தொடர்ந்து பதிவிட தற்போது விஷயம் அஜித்தின் காதிற்கு சென்றுள்ளது.

Ajith

இதனைத் தொடர்ந்து தன்னுடைய பெயர் மற்றும் கையொப்பத்தை யாரோ தவறாக பயன்படுத்தியுள்ளனர். தனக்கென எந்தவித சமூக ஊடக கணக்குகள் இல்லை என்றும் இனிமேலும் அப்படிப்பட்ட ஊடகங்ககளில் இணைய விரும்பவில்லை என்றும் தனது சட்ட ஆலோசகர்கள் மூலம் நடிகர் அஜித் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் அஜித்தின் கையொப்பத்தினை பயன்படுத்தி தவறான செய்தியை வெளியிட்ட குற்றவாளியை கண்டுபிடிக்க தேவையான மற்றும் பொருத்தமான சட்ட நடவடிக்கைகள் முடிந்தவரை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.