குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
அம்மாடியோவ்.. இது வேற மாறி! ஏகே 62 படத்திற்காக அஜித் பெறும் சம்பளம் இவ்வளவா?? ஆச்சரிய தகவல்!!
தமிழ் சினிமாவில் ஏராளமான பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்து டாப் நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றிருக்கும் அவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் வலிமை. போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான அந்தத் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் பெரும் வசூல் சாதனை படைத்தது.
அதனைத் தொடர்ந்து அதே கூட்டணியில் அஜித் ஏகே 61 படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் ஷுட்டிங் இன்னும் சில வாரங்களில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் துவங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் ஏகே 62 படம் குறித்த தகவலும் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறாராம். ஏகே 62 படத்திற்காக அஜித் 100 கோடி சம்பளம் கேட்டாராம். ஆனால் அஜித்தின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் லைகா புரொடக்ஷன் ரூ.105 கோடி சம்பளம் தர நிர்ணயித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
.