#JustIN: நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்தியது யார்? சிசிடிவி கேமரா காட்சியில் புதிய திருப்பம்.!
விடாமுயற்சி படத்தில் இரண்டு கதாநாயகிகளா.. யார் யார் தெரியுமா.?
அஜித்தின் 62ம் படமான "விடாமுயற்சி", சில மாதங்களுக்கு முன்பு, லைக்கா நிறுவனத் தயாரிப்பில், மகிழ்திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகவிருக்கிறது என்று அறிவிப்பு வெளியானது. அதன்பிறகு, இன்னும் ஷூட்டிங் கூட ஆரம்பிக்கப்படவில்லை.
இதுவரை படத்தைப்பற்றிய எந்த செய்தியும் வெளியாகாமல் அஜித் ரசிகர்கள் மிகுந்த அப்செட்டில் இருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, 'விடாமுயர்சி' திரைப்படம் கைவிடப்படுவதாக தகவல் பரவியது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.
இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்கவிருப்பதாகவும், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்போகும் நாளுக்காக அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். சமூக வலைத்தளங்களிலும் 'விடாமுயற்சி' திரைப்படம் எப்போது தொடங்கும் என்று பரவலாக கேட்கின்றனர்.