பொது நிகழ்ச்சியில் தல அஜித்துக்கு சவால் விட்ட நடிகர் விவேக்! இதை செய்வாரா தல அஜித்!



Ajith vivak

தல அஜித் தமிழ் சினிமாவில் கொண்டாடக்கூடிய ஒரு முன்னணி நடிகர். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரின் பிறந்த நாள் மற்றும் படங்களை ரசிகர்கள் விழா போல கொண்டாடி வருகின்றனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான நேர் கொண்ட பார்வை படம் பெண்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

Ajith

இந்நிலையில் தற்போது தல அஜித்துடன் பல இணைந்து நடித்துள்ள நடிகர் விவேக் அவர்கள் பொது நிகழ்ச்சி ஒன்றில் தல அஜித்துக்கு சவால் விட்டுள்ளார். அதாவது விவேக் நடிப்பில் உருவாகியுள்ள தாராள பிரபு திரைப்படத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது சவால் விட்டுள்ளார்.

அதில் அவரிடம் ஒரு பிரபலத்திற்கு சவால் விட வேண்டும், என்றால் யாருக்கு விடுவீர்கள்? என்று கேட்டனர்.அதற்கு விவேக் அஜித் அவர்களுக்கு ஒரு சவால், அவர் தன்னுடைய ரசிகர்களை நிறைய மரம் நட சொல்ல வேண்டும் என்று ஆக்கப்பூர்வமான சவால் விட்டார்.