பிக்பாஸ் சௌந்தர்யாவின் நடிப்பில் அட்டகாசமான டிஸ்டன்ட் திரைப்படம்; ட்ரைலர் வைரல்.!
என்னது.. பாரதிகண்ணம்மா தொடரில் இருந்து விலகுகிறாரா இந்த முக்கிய நடிகர்! பரவிவரும் ஷாக் தகவல்!!
விஜய் தொலைக்காட்சியில் நாளுக்கு நாள் சுவாரசியங்களுடன், வித்தியாசமான கதைக்களத்துடன் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு தற்போது எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா.
இந்தத் தொடரில் பாரதியாக அருண் மற்றும் கண்ணம்மாவாக ரோஷினி ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் வில்லியாக பரினா மற்றும்
அஞ்சலி கேரக்டரில் ஸ்வீட்டியும், அகிலன் கேரக்டரில் அகிலும் நடித்து வருகின்றனர். பாரதிகண்ணம்மா தொடரை வைத்து அவ்வப்போது ஏராளமான மீம்கள் வெளியாகும்.
இந்த நிலையில், அஞ்சலியாக நடிக்கும் ஸ்வீட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தொடரில் தனக்கு கணவனாக நடிக்கும் அகிலனை டாக் செய்து புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இதுபோன்ற எடிட்டை இனி மிஸ் செய்வோம் என பதிவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அகில் அல்லது அஞ்சலி யாரேனும் இந்த தொடரிலிருந்து விலகலாம் என்ற தகவல் பரவி வருகிறது.