முதல்வரின் திருமண விழாவில், ரூ.1.5 இலட்சம் மதிப்புள்ள தங்க நகை திருட்டு; பெண் குமுறல்.!



  in Uttar Pradesh Harodi Girl Lost Gold Chain during the Marriage Festival 

திருமண விழாவில் கலந்துகொண்ட பெண்ணின் நகை திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹரோடி மாவட்டத்தில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் 847 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை முதல்வர் காணொளி வாயிலாக நடத்தி இருந்தார். நிகழ்விடத்தில் 2 அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக இருந்தனர். காவல்துறையினர் பலத்த பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

அமைச்சர்கள் இருந்தனர்

கலால் துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை இருந்த திருமண நிகழ்ச்சி, ஹர்டோய் சிஎஸ்என் பிஜி கல்லூரியில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு ஃபரூகாபாத் மாவட்டத்தில் வசித்து வரும் லட்சுமி ஸ்ரீவஸ்தவா என்ற பெண், தனது மைத்துனரின் திருமணத்திற்கு வருகை தந்துள்ளார். 

இதையும் படிங்க: 50 வயதில் 24 வயது மகளை கரம்பிடித்த தந்தை? வைரலாகும் வீடியோ., அதிர்ச்சியில் நெட்டிசன்கள்.!

நகை திருட்டு

அப்போது, உணவு வாங்க அவர் கடைக்குச் சென்ற நிலையில், மர்ம நபர் ஒருவர் பெண்ணை முன்புறமாக தள்ளிவிட்டு, அவரின் கழுத்தில் இருந்த ரூ.1.5 இலட்சம் மதிப்புள்ள நகையை பறித்துச் சென்றார். நிகழ்விடத்தில் பலத்த பாதுகாப்பு இருந்தபோதும், திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக ஹரோடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: திருமணமான 2 மாதத்தில் இரண்டாவது திருமணம்.. மனைவிக்காக கதறிய கணவன்., டேக்கா கொடுத்த இளம்பெண்.!