96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
நாங்களும் மனுசங்கதானே.! இது ரொம்பவே தப்பு! பிரபல நடிகரை விளாசிய ஆலியா மானசா!!
தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற பல முக்கிய நகரங்களில் லிட்டில் வீ என்ற பெயரில் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக புதிய கிளை ஒன்று கரூர் - கோவை சாலையில் துவக்கப்பட்டுள்ளது. மருத்துவர் ஷிஃபா
தலைமையில் மருத்துவமனை நடைபெற உள்ளது.
இதன் துவக்க விழாவில் பிரபல ராஜாராணி சீரியல் நடிகை ஆலியா மானசா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் 'தடுப்பு குழந்தை பல் மருத்துவம்' சிறப்பான நிலையை எட்டும் என கூறியுள்ளார். மேலும் அவரிடம் நடிகர் பயில்வான் ரங்கநாதன் திரையுலக பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கூறிவருவதை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு ஆலியா மானசா, சினிமா துறையில் இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களது தனிப்பட்ட விஷயங்கள் வெளியில் கொண்டு வருவதாக மோசமான கருத்துக்களை கூறுவது தவறு. சினிமா துறையில் இருப்பவர்கள் என்ன பாவம் செய்தோம். நாங்களும் மனிதர்கள்தானே. எங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு. நடிகர் பயில்வான் ரங்கநாதன் அவ்வாறு பேசுவது வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார்.