96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
கியூட் பேபி.. குழந்தையுடன் குதூகலமாக போஸ் கொடுக்கும் ஆலியா மானசா..! அம்மான்னா சும்மாவா..!!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகியாக இருந்தவர் ஆலியா மானசா. இவர் தனது இரண்டாவது பிரசவத்திற்காக ராஜாராணி சீரியலை விட்டு வெளியேறிய நிலையில், புதியதாக எந்த சீரியலிலும் நடிக்காமல் இருக்கிறார்.
அத்துடன் விரைவில் அவர் சன் டிவியில் ஒரு புதுதொடரில் நடிக்க இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. அவரது கணவர் சஞ்சீவ் முன்பே சன்டிவி சீரியலில் நடித்து வரும் நிலையில், அவரைப் பின்பற்றி ஆலியாவும் அந்த சேனலுக்கு செல்கிறார் என்றும் கூறப்படுகிறது.
ஆர்யா - சஞ்சீவி ஜோடிக்கு முதலில் பெண்குழந்தையும், இரண்டாவதாக ஆண் குழந்தையும் பிறந்தது. தங்களது மகனுக்கு "ஹர்ஷ்" என்று பெயர் சூட்டியிருக்கின்றனர். தற்போது ஆலியா மானசா தனது மகனுடன் ஒரு போட்டோவை இன்ஸ்டாபக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.