96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
என்னது? ராஜா ராணி 2 வில் ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கும் ஆலியா மானசா! உற்சாகத்தில் ரசிகர்கள்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ராஜா ராணி 2 தொடரில் நடிகை ஆலியா மானசா ஐபிஎஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தொடர்களில் ஒன்று ராஜா ராணி. இதில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஆலியா மானசா. அதுமட்டும் இல்லாமல், அந்த தொடரின் நாயகன் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் அழகான பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது.
இந்நிலையில் ராஜா ராணி தொடர் முடிவடைத்துள்ளதால், தற்போது அதன் 2 பாகம் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரில் ஆலியா சந்தியா என்ற ஐபிஎஸ் அதிகாரி கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், அதற்காக அவர் பல்வேறு பெண் போலீஸ் அதிகாரிகளின் வீடியோக்களை பார்த்து, அவர்களின் நடை, உடை பாவனைகளை கவனித்துவருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இந்த கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவகையில் இருக்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தொடரில் ஆலியாவுக்கு ஜோடியாக சித்து நடிக்கிறார். இவர் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற திருமணம் சீரியலில் சந்தோஷ் என்ற கதாபாத்தில் அந்த தொடரின் நாயகனகா நடித்திருந்தார்.