96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
ஓ.. இந்த வித்தையெல்லாம் வேற தெரியுமா? புகைபிடித்துவிட்டு அமலாபால் வெளியிட்ட புகைப்படம்! ஷாக்கான ரசிகர்கள்!
தமிழ்சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் நடித்ததன் அறிமுகமானார் நடிகை அமலா பால். அதனை தொடர்ந்து அவர் மைனா, நிமிர்ந்து நில், முப்பொழுதும் உன் கற்பனை, வேலையில்லா பட்டதாரி, தலைவா, ராட்சசன் என ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை அமலாபால், இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து அமலாபால் ஆடை திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவர் நடித்த சில காட்சிகள் பெரும் சர்ச்சையானது.
தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்துவரும் நடிகை அமலாபால், சமூகவலைதளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருப்பார். மேலும் அவ்வப்போது வித்தியாசமான போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களையும் வெளிட்டு வருவார். இந்நிலையில் அவர் தற்போது புகைபிடித்து வட்டமாக புகைவிடுவது போன்ற ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள், இந்த வித்தையெல்லாம் தெரியுமா என கிண்டல் செய்து வருகின்றனர்.