96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
தனது சொந்த செலவில், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 6 விமானங்களை ஏற்பாடு செய்த பிரபல நடிகர்!
இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. இதனால் நாளுக்குநாள் பலி எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இத்தகைய கொடிய வைரஸால் ஒட்டுமொத்த உலகமும் பெரும் அச்சுறுத்தலில் உள்ளது. இந்நிலையில் கொரோனோவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிற மாநிலங்களில் பணியாற்றி வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையின்றி வருமானமின்றி தவித்து வந்த நிலையில், அவர்களது சொந்த மாநிலங்களுக்கு நடந்து செல்ல துவங்கினர். அதனைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தது.மேலும் பல திரைப் பிரபலங்களும் தொழிலாளர்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கித்தவித்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல ஆறு விமானங்களை ஏற்பாடு செய்துள்ளார். அதன் மூலம் 1547 தொழிலாளர்கள் பயணம் செய்துள்ளனர். அவர்களில் நேற்று சில தொழிலாளர்கள் பயணம் செய்த நிலையில், மீதமுள்ள சிலர் இன்று அழைத்து செல்லப்பட்டனர். இவர் ஏற்கனவே புலம்பெயர் தொழிலாளர்களுக்காக தனது செலவில் 10 பேருந்துகளை ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.