குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
அமிதாப்பச்சனின் முக்கியமான 3-வது அறிவுரையை மீறிய நடிகர் ரஜினி! செம உற்சாகத்தில் கொண்டாடும் ரசிகர்கள்!
ரஜினிகாந்த் தற்போது AR முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துள்ளார். மேலும் அப்படத்தில் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் நிவேதா தாமஸ் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இதன் படபிடிப்பு வேலைகள் முடிவடைந்த நிலையில் படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நேரு உள்அரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. மேலும் படம் இந்தியிலும் வெளியாகும் நிலையில் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடைபெற்றது. மேலும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் ரஜினியும் நிகழ்ச்சியில் விறுவிறுப்பாக பேசினார். அப்பொழுது அவர் கூறுகையில், நடிகர் அமிதாப் பச்சன் 60 வயதில் மூன்று விஷயங்களை கடைபிடிக்கும்படி எனக்கு அறிவுரை வழங்கினார். அதன்படி உடற்பயிற்சி தவறாமல் செய்ய வேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அரசியலில் நுழையக் கூடாது என அறிவுரை கூறினார். ஆனால் என்னால் முதல் இரண்டை மட்டுமே சரியாக கடைபிடிக்க முடிந்தது. ஆனால் அரசியலில் நுழையக் கூடாது என்ற மூன்றாவது அறிவுரையை மட்டும் என்னால் கடைபிடிக்க முடியவில்லை என கூறியுள்ளார்.