96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு திடீர்னு என்ன ஆச்சு.? இப்படி ஆகிட்டாங்களே.!
இங்கிலாந்தைச் சேர்ந்த எமி ஜாக்சன், தமிழில் "மதராசப்பட்டினம்" திரைப்படம் மூலம் அறிமுகமானார். இவர் "மிஸ். டீன் வேர்ல்ட்" பட்டத்தையும், "மிஸ். டீன் லிவர்பூல்" பட்டத்தையும் வென்றுள்ளார். இதை தவிர உலக அளவில் பதினெட்டுக்கும் மேற்பட்ட அழகி விருதுகளையும் வென்றுள்ளார்.
இவர் தமிழில் மதராசப்பட்டினம் படத்தை தொடர்ந்து, தாண்டவம், ஐ, தங்கமகன், தெறி, 2.0 ஆகிய படங்களில் விஜய், விக்ரம், ரஜினி, அக்ஷய் குமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது அருண் விஜய் நடிக்கும் "மிஷன் அத்தியாயம் 1" திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தற்போது பிரபல ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்து வரும் எமி ஜாக்சன், அவருடன் சேர்ந்து இத்தாலியின் "மிலன் பேஷன் வீக்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக வருகிறது.
அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், "ஓபன் ஹெய்மரில் வரும் சிலியன் மார்பின் தோற்றம் போல் எமி ஜாக்சனின் தோற்றம் உள்ளது" என்று கூறி வருகின்றனர். மேலும் பலர் எமி ஜாக்சன் தோற்றத்தைக் கிண்டல் செய்து இவருக்கு திடீர்னு என்னாச்சு என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.