96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
படவாய்ப்பு இல்லாமல் விவசாயம் செய்து வரும் எமி ஜாக்சன்.. வெளியான புகைப்படத்தால் பரபரப்பு.?
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் எமி ஜாக்சன். இவர் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வந்தார். தமிழில் முதன் முதலில் ஆர்யா நடிப்பில் வெளியான 'மதராசபட்டினம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
முதல் படமே மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இப்படத்திற்கு பின்பு சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் ஐ , எந்திரன் 2.0 போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இவ்வாறு தமிழில் பிரபலமான நடிகையாக வலம் வந்த எமி ஜாக்சனிற்கு ஒரு சில திரைப்படங்களுக்கு பின்பு வேறு ஏதும் பட வாய்ப்பு வரவில்லை. இதனை அடுத்து சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் எமி ஜாக்சன்.
தனது காதலருடனும், குழந்தையுடனும் இருக்கும் புகைப்படத்தை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இவ்வாறு தனது மகனுடன் விவசாய நிலத்தில் பூசணிக்காய்களை பறித்து ஜாலியாக விளையாடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படம் வைரலாகி வருகிறது.