ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
சல்மான் கான் - ராஷ்மிகா நடிக்கும் படத்தை இயக்கும் ஏ.ஆர் முருகதாஸ் - வெளியான தகவல்.!
2001 ம் ஆண்டு அஜித் குமாரின் தீனா திரைப்படத்தின் வாயிலாக திரையுலகில் இயக்குனாக அடியெடுத்து வைத்த ஏ.ஆர் முருகதாஸ், தற்போது நடிகர் சிவகார்த்திகேயனின் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. அதற்கான பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.
பல வெற்றிப்படங்களுக்கு சொந்தக்காரர்:
தமிழில் தீனா, ரமணா, கஜினி, 7 ம் அறிவு, துப்பாக்கி, கத்தி, ஸ்பைடர், தர்பார், சர்க்கார் உட்பட பல வெற்றிப்படங்களை கொடுத்த ஏ.ஆர் முருகதாஸ், படங்களை தயாரித்தும் வழங்கி இருக்கிறார். 2020 க்கு பின் எந்த படங்களை இயக்கவில்லை என்றாலும், தற்போது சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து இருந்தார்.
ஹிந்தியில் களமிங்கும் ஏ.ஆர்.எம்:
இப்படத்திற்கு பின்னர் ஹிந்தியில் ராஷ்மிகா மந்தனா, சல்மான் கான் உட்பட பலர் நடிக்கும் படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார். இப்படத்தை என்ஜிஇ மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்தை 2025 ஈத் பண்டிகைக்கு திரையிலிட ஏற்பாடுகளுடன் பிற பணிகளை படக்குழு தொடங்கி இருக்கிறது.