கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
கவின் இப்படிப்பட்டவரா? அவரது அம்மா சொன்னது இதுதான்? பல உண்மைகளை போட்டுடைத்த பிரபல நடிகர்!!
பிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசன் தொகுத்து வழங்க விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எழுபது நாட்களை கடந்துவிட்ட பிக்பாஸ் சீசன் 3 தற்போது இறுதி கட்டத்தை நெருங்கிவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த போட்டியில் 8 பிரபலங்கள் மட்டுமே விளையாடி வருகின்றனர்.
இவர்களுள் ஒருவர் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான நடிகர் கவின். பிக்பாஸ் வீட்டில் நுழைந்த சில நாட்களிலேயே பல இவர் பல சர்ச்சைகளில் சிக்கினார். மேலும் மூன்று பெண்களுடன் காதல், பிளேபாய் என அவரது பெயர் சிக்கி சின்னாபின்னமானது.
இந்நிலையில் சமீபத்தில் அவரது தாய் சீட்டு பணம் போட்டு ஏமாற்றி விட்டதாக கைது செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கவினை கிண்டல் செய்து பல மீம்ஸ், ட்ரோல் ஆகியவை வெளிவந்தது. இந்நிலையில் கவினை குறித்து அவரது நண்பரும், அருவி படத்தின் நாயகனுமான பிரதீப் ஆண்டனி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, எனக்கு 11 ஆண்டுகளாக கவினை தெரியும். அனைத்து பிரச்சினைகளிலும் எனக்கு துணையாக இருந்துள்ளார். நானும் பல பிரச்சினைகளில் அவருடன் இருந்துள்ளேன். சீட்டு பிடிப்பது என்பது பொதுவாக அனைத்து இடங்களிலும் நடக்கும் ஒன்றாகும். அதேபோல கவினின் பாட்டி திருச்சியில் அனைவரும் மதிக்கும் அளவில் நாணயமாக சீட்டு போட்டு நடத்திக்கொண்டிருந்தார்.
அப்பொழுது நானும் பாட்னராக உங்களுடன் சேர்ந்து கொள்கிறேன் என்று நபர் ஒருவர் நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார். இந்நிலையில் கவினின் அம்மாவிடம் பணம் கொடுத்தவர்கள் அவர்மீது வழக்கு தொடர்ந்தார்கள். இதனால் கவின் மிகவும் மன உளைச்சலில் இருந்தார். சம்பாதித்து அந்த பணத்தை எப்படியாவது திருப்பிக் கொடுக்கவேண்டும் என அவர் அடிக்கடி சொல்வார் என கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் கவினிடம் சொல்லலாமா என தொலைக்காட்சி நிறுவனம் கேட்டதற்கு கவின் தயார் வேண்டாமென மறுத்துள்ளார்கள். கவினுக்கு இப்பொழுதுதான் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.எங்களால் அவன் நிகழ்ச்சி வெளியே வரவேண்டாம் என கூறியுள்ளனர். மேலும் கவின் காதல் மன்னன் பிளேபாய் என்பதெல்லாம் கிடையாது அவன் மக்களுக்கு பொழுதுபோக்காக இருக்கவேண்டும் என இப்படி செய்து பல பிரச்சினையில் மாட்டி கொண்டார் என கூறியுள்ளார்.