#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பெத்த மகளுக்கே பாலியல் தொல்லை... ஆசிரியை மூலம் வெளிவந்த உண்மை.!! தந்தை போக்சோவில் கைது.!!
திருப்பூர் அருகே சொந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தந்தை கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
பள்ளியில் நடைபெற்ற போக்சோ விழிப்புணர்வு
தற்காலங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதற்கு எதிராக மாணவிகள் மற்றும் சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், போக்சோ சட்டத்தைப் பற்றி மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மேலும் இந்த நிகழ்வில் குட் டச் மற்றும் பேட் டச் பற்றியும் சமூக ஆர்வலர்கள் மாணவியருக்கு கற்றுக் கொடுத்தனர்.
தந்தையை பற்றி புகாரளித்த மாணவி
இந்நிலையில் விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட 12 வயது மாணவி, ஆசிரியையிடம் தனக்கும் இதுபோன்று நடந்ததாக தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த மாணவியிடம் விரிவாக கேட்டபோது தனது தந்தை 4 வருடங்களாக தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததை மாணவி தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட ஆசிரியை உடனடியாக மாணவியின் தாய்க்கு தகவல் கொடுத்தார்.
இதையும் படிங்க: "புள்ளையும், புருசனும் வேணாம்.." ஃபேஸ்புக் லவ்வர் வேணும்.!! அடம்பிடித்த இளம்பெண்.!! அட்வைஸ் செய்த போலீஸ்.!!
தந்தை போக்சோவில் கைது
தனது மகள், தந்தையால் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த தாய் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் சிறுமியின் தந்தையை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் குழந்தையை 4 வருடங்களாக பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதை ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.
இதையும் படிங்க: "குடி குடியை கெடுக்கும்.." போதையால் சீரழிந்த குடும்பம்.!! புதுமண தம்பதி தற்கொலை.!!