96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அந்த விஷயத்திற்காக தான் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்து கொண்டாரா.?
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் அசோக் செல்வன். 'ப்ளூ ஸ்டார்' என்ற திரைப்படத்தில் அசோக் செல்வனும், அருண்பாண்டியன் மகளான கீர்த்தி பாண்டியனும் ஒன்றாக நடித்து வந்தனர். இருவருக்கும் ஏற்பட்ட நட்பு காதலானதால் சமீபத்தில் இரு வீட்டார் சம்மதத்துடனும் அருண்பாண்டியன் பண்ணையில் திருமணம் நடைபெற்றது.
மேலும் அசோக் செல்வனுக்கு பெண்கள் மத்தியில் மவுஸ் அதிகம். இதனால் கீர்த்தி பாண்டியனை பெண் ரசிகைகள் கலாய்த்தும், பாடி சேமிங் செய்தும் இணையத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் "எங்க கிட்ட இல்லாதது அப்படி என்ன அவகிட்ட இருக்கு" என அவர் திருமண புகைப்படத்தின் கீழ் கமெண்ட் செய்துள்ளனர்.
விக்னேஷ் சிவன் நயன்தாரா- திருமணத்தின் போதும் நயன்தாராவின் ரசிகர்களிடையே எழுப்பப்பட்ட கேள்வியும் இதுதான். மேலும் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவிந்தருக்கு நடைபெற்ற திருமணத்தின் போதும் இதே கேள்வியை ரசிகர்கள் கேட்டிருந்தனர்.
அவர் வரிசையில் இப்போது கீர்த்தி பாண்டியனும் சேர்ந்துள்ளார். கீர்த்தி பாண்டியனின் தந்தை அருண்பாண்டியன் 120 கோடிக்கு சொந்தக்காரர். அவர் இப்போது அந்த சொத்துக்களில் அசோக் செல்வனுக்கும் பெரும் பங்கு உள்ளது எனன நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் ரசிகைகள் என்ற பெயரில் இவ்வாறு ஒரு வரை பாடி ஷேவிங் செய்து கமெண்ட் செய்து வருவது பொதுமக்களிடையே முகம் சுழிக்க வைத்திருக்கிறது.