96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அப்படி போடு.. இனிதான் தரமான சம்பவமெல்லாம் இருக்கு.! கோபிக்கு செம ஷாக் கொடுத்த அப்பா! வைரலாகும் வீடியோ!!
பிரபல விஜய் தொலைக்காட்சியில் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களுடன் மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு உள்ளது. பாக்கியலட்சுமி தொடரில் கோபி தனது மனைவி பாக்கியாவிற்கு துரோகம் செய்துவிட்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனது முன்னாள் காதலி ராதிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதனால் அவரது குடும்பத்தினர் அனைவரும் கோபி மீது பெரும் கோபத்தில் உள்ளனர். இதற்கிடையில் கோபி மற்றும் ராதிகா இருவரும் பாக்யா வீட்டிற்கு அருகிலேயே வந்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் இனியா தனது அம்மா பாக்யா மற்றும் குடும்பத்தினரிடம் கோபம் கொண்டு கோபியுடனே செல்கிறார்.
இந்த நிலையில் கோபியின் அப்பாவும் என் பேத்தி இருக்கும் இடத்தில்தான் நானும் இருப்பேன் எனக்கூறி ராதிகா வீட்டிற்க்கே சென்றுள்ளார். அதனைக் கண்டு கோபி திக்குமுக்காடி போயுள்ளார். இந்த நிலையில் இனி வரும் எபிசோடுகளில் பல சுவாரசியங்கள் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ப்ரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.