32 வயது தான் ஆகிறது, இறந்துவிட்டார்.! நடிகர் பாலா சரவணன் வீட்டில் நடந்த சோகம்.! கொரோனாவிடம் எச்சரிக்கையா இருங்கள்.!



bala-saravanan-sisters-husband-died-for-corona

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. திரையுலக பிரபலங்கள் பலருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்த் திரையுலகில் நேற்று (மே 6) ஓரே நாளில் பாடகர் கோமகன், நடிகர் பாண்டு உள்ளிட்டோர் கரோனா தொற்றுக்குப் பலியாகினர். 

மேலும், பிரபலங்கள் பலரும் படப்பிடிப்பு அனைத்தையும் ரத்து செய்துவிட்டு வீட்டிலேயே இருக்கிறார்கள். இதனிடையே, நடிகர் பால சரவணனின் தங்கை கணவர் கரோனாவுக்கு பலியாகியுள்ளார். பாலா சரவணன் கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமாகி, அதன் பின் தமிழ் திரையுலகில் நுழைந்தார். அவர் ஒரு சிறந்த காமெடி நடிகராக வலம் வருகிறார். இவர் ஒருநாள் கூத்து, திருடன் போலிஸ், ராஜா மந்திரி, டார்லிங் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

காமெடி நடிகரான பாலா சரவணன் அவரது டுவிட்டர் பக்கத்தில், "அன்பு நண்பர்களே...இன்று எனது தங்கையின் கணவர் கொரோணா காரணமாக இறந்துவிட்டார்...32வயது... தயவு கூர்ந்து மிக கவணமாக இருக்கவும்...நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம்...நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும்...முக கவசம் அணிவீ்ர்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.