ஓயோ விரும்பிகளுக்கு ஆப்பு வைத்த நிர்வாகம்; இனி நாங்க ரொம்ப ஸ்டிட்டு பாஸ்.!



Oyo Announcement on Valid Proofs  

 

காதலை விரும்பிய இளம் ஜோடிகள் பலரிமும் வரவேற்பு பெற்ற விடுதி புக்கிங் முறையில் இருந்தது ஓயோ. இதுதொடர்பான பல மீம்கள் சமூக வலைத்தளங்களில் கொடிகட்டி பறந்தன. இதனால் ஓயோவின் பெயர் உலகளவில் பிரபலமானது. 

குறிப்பாக திருமணம் செய்யாத, திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் காதல் ஜோடிகளிடையே, தங்களின் தனிமை நடவடிக்கைக்காக எவ்வித பிரச்சனையும் இல்லாமல் ஒயோவில் புக்கிங் செய்து விடுதிக்கு சென்று வந்தனர்.

இதையும் படிங்க: இனி பேஸ்புக், இன்ஸ்டாவில் இதை செய்ய முடியாது.. 2k கிட்ஸ் அதிர்ச்சி.! மத்திய அரசு செக்.!

ஒயோவின் அதிரடி அறிவிப்பு

இதனால் சில இடங்களில் தனிமை ஜோடிகளின் சூழ்நிலையை பயன்படுத்தி, அவர்களின் தனிமை காட்சியை அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுத்து பதிவிட சம்பவங்களும் நடைபெற்றன. 

இந்நிலையில், ஓயோ நிறுவனம் திடீர் அதிரடி முடிவை எடுத்து இருக்கிறது. அதன்படி, ஒயோவில் புக்கிங் செய்து வரும் காதல் ஜோடிகள், தங்களின் உறவு குறித்த உரிய ஆவணத்துடன் மேற்கொண்டால் மட்டுமே புக்கிங் உறுதி செய்யப்படும். 

திருமணம் செய்த தம்பதிகளின் வருகையை ஈர்க்கும்பொருட்டு, ஓயோ நிர்வாகம் இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.