96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
உச்சகட்ட பேரதிர்ச்சி.. கண்ணம்மாவுக்கு துரோகம் செய்யும் பாரதி.. கட்டிபிடித்து நெஞ்சில் சாய்ந்த வெண்பா.. பரபரப்பு ப்ரோமோ வைரல்..!!
பிக் பாஸுக்கு ஆசைப்பட்ட ரசிகர்கள் பாரதி கண்ணம்மாவை சேர்த்து வைத்து சீரியலுக்கு விடைகொடுப்பார்கள் என்று எண்ணியிருந்த நிலையில், சீரியலின் இயக்குனர் வைத்த ட்விஸ்ட்டால் பார்வையாளர்கள் ஆடிப்போன சம்பவம் குறித்த ப்ரமோ வெளியாகியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக மக்களை கவர்ந்த தொடர் பாரதிகண்ணம்மா. தற்போது இந்த நெடுந்தொடர் ஒரே கதையை மையமாக கொண்டு இரண்டு வருடத்திற்கு மேல் எடுக்கப்பட்டு வருவதால், மக்கள் பலரும் தொடரை எப்பொழுது முடிப்பீர்கள்? என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் பாரதியும், கண்ணம்மாவும் ஒன்று சேரப்போகிறார்கள் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பரவிவந்தது. ஆனால் தற்போது மீண்டும் அடுத்த வாரப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மனதை புண்படுத்தியுள்ளது. அதில் பாரதியிடம் சென்ற வெண்பா, 'நான் கர்ப்பமாக இருக்கிறேன். என்னை யாரோ கற்பழித்து விட்டார்கள்.
நீ தான் எனக்கு தாலி கட்டவேண்டும். என் மகனுக்கு நீதான் அப்பாவாக வேண்டும்' என்று கூறுகிறார். ஆனால் பாரதியோ இதனால் கோபமடைந்து, நான் உன்னை திருமணம் செய்யமுடியாது என்று மறுத்து சென்றுவிடுகிறார். அப்பொழுது வெண்பா தனது நயவஞ்சக புத்தியை செயல்படுத்தி, வீட்டில் தான் விஷமருந்தியது போல நாடகமாடி அதனை வீடியோ எடுத்து பாரதிக்கு அனுப்பி வைத்து மயங்கி கிடக்கிறார்.
இந்த வீடியோவை கண்டு உடனடியாக பதறியடித்து ஓடிவந்த பாரதி, படுக்கையறையில் சென்று பார்க்கும் போது வெண்பா மயக்கமாக இருந்துள்ளார். அவரை தூக்கி சென்று மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் வெண்பா சிறிதுநேரத்தில் கண்முழித்து நான் சாகப்போகிறேன் என்று கத்தியை வைத்து மிரட்டுகிறார்.
நீ என்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும், என் மகனுக்கு தந்தையாக வேண்டும் என்று அவர் கூறுகிறார். வெண்பாவின் உயிரை காப்பாற்ற பாரதியும் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறவே, வெண்பா பாரதியை கட்டியணைத்து இது போதும் எனக்கு என்று கூறுகிறார்.
இந்த ப்ரோமோவை கண்ட ரசிகர்கள் இந்த கருமத்தையெல்லாம் எங்களுக்கு பாக்கணும்னு இருக்கு.. இந்த சீரியலை சீக்கிரம் முடிங்கடா என்று விஜய் டிவியை கழுவி ஊற்றி வருகின்றனர்.