குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
இந்த வயசுலயும் அழகு அள்ளுதே.! ஹாயாக பீச்சில் காத்து வாங்கும் நடிகை பூமிகா! வைரல் புகைப்படங்கள்!!
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளிவந்த பத்ரி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூமிகா. அதனைத்தொடர்ந்து அவர் ஸ்ரீகாந்துடன் ரோஜா கூட்டம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் மூலம் அவர் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். பின் சூர்யாவின் ஜில்லுனு ஒரு காதல் படத்தில் அவரது நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.
மேலும் அவர் ஹிந்தி, மலையாளம், மற்றும் பஞ்சாப் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகை பூமிகா கடந்த 2007 ஆம் ஆண்டு பரத் தாகூர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் அவர் தற்போது அண்ணி மற்றும் அக்கா என்ற துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
43 வயது நிறைந்த அவர் தற்போதும் தனது உடலை பிட்டாக வைத்து இளமையோடு உள்ளார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் பூமிகா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவார். அவர் தற்போது ஜாலியாக பீச்சில் காத்து வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.