96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
12 வாரமா இதை வச்சுதானே ஓட்டிக்கிட்டு இருந்தேன்! பிக்பாஸ் அதிரடிஅறிவிப்பு! ஷாக்கான பாலா!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 , 11 வாரங்களை கடந்து நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா,சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், நிஷா, அர்ச்சனா ஆகியோர் வெளியேறியுள்ளனர். இன்னும் ஒரு சில வாரங்களில் நிகழ்ச்சி முடிவடையவுள்ளது.
மேலும் கடந்த வாரம் ஆரி, ஆஜித், சிவானி, கேப்ரில்லா, அனிதா சம்பத் ஆகியோர் நாமினேஷனில் இடம்பெற்ற நிலையில் அனிதா குறைந்த வாக்குகளைப்பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் ஆரி இந்த வாரத்திற்கான கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் இந்த வாரத்திற்கான நாமினேஷனலிருந்து தப்பித்தார்.
#Day85 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/Go0DD9cVCu
— Vijay Television (@vijaytelevision) December 28, 2020
அதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் நேரடியாக நடைபெற்றுள்ளது. அப்பொழுது பிக்பாஸ் ஆரியை நாமினேட் செய்ய முடியாது எனக் கூறிய நிலையில் பாலா சட்டென 12 வாரங்களாக இதை வைத்துதானே ஓட்டிக்கொண்டு இருந்தேன். இனி வேறு காரணம் தேடணுமா என கிண்டலாக கூறியுள்ளார். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.