டிக்டாக்கிற்கு வைக்கப்பட்ட ஆப்பு! உற்சாகமடைந்த நடிகையை வச்சு செய்த பிக்பாஸ் பிரபலம்!!



bigboss artist answered to actress about ban tiktak

சமீப காலமாக இளைஞர்கள் பெருமளவில் பயன்படுத்தி வந்த செயலி டிக்டாக். அதில் இளைஞர்கள, இளம்பெண்கள் என பலரும் தங்களது திறமையை சிறந்த அளவில் வெளிப்படுத்தியிருந்தனர். ஆனாலும்  பலர் அதனை ஆபாசமாகவும், எல்லை மீறியதாகவும் பயன்படுத்தி வந்தனர்.

tik tak

இந்நிலையில் இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டிக் டாக் ஆப் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் பலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு ஆதரவு தெரிவித்து பாலிவுட் நடிகை குப்ரா சேட் தனது ட்விட்டர் இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்டதை அறிந்து நான் அடைந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தையே இல்லை என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.



 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளரும், பிக் பாஸ் பிரபலமுமான விகாஸ் குப்தா விளாசி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் டிக் டாக் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வலியை குறைக்கும் ஒன்றாக இருந்தது மேலும் டிக்டாக் மற்றும் மியூசிக்கலி செயலி மூலம் மக்கள் பெருமளவில் தங்களது திறமைகளை வெளியிட்டு வந்தனர்.



 

மேலும் நல்லதோ, கெட்டதோ தங்களது திறமைகளை காட்ட தொலைக்காட்சிகள் படங்கள் டிக்டாக் போன்றவை இளைஞர்களுக்கு  அடித்தள மேடையாக இருந்தது. மேலும் பலர்  தனி ஒருவர்களாக அசத்தலான தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர் மேலும் அவர்களது வாழ்க்கைக்கு டிக்டாக் சிறந்த அடித்தளமாக அமைந்தது. மேலும் ஒரு நடிகையாக இருந்துகொண்டு இவ்வாறு  கூறுவது மிகவும் அதிருப்தி அளிக்கிறது என விகாஸ் குப்தா கூறியுள்ளார்.