#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குளிருக்கு பயந்து இப்படி மட்டும் தூங்காதீர்கள்..! பெரும் ஆபத்தை சந்திக்கலாம்.!
நம்மில் பலரும் குளிர்காலத்தில் போர்வையால் தலை முதல் கால் வரை மூடிக் கொண்டு தூங்கும் பழக்கத்தை வழக்கமாகக் கொண்டுள்ளோம். குளிருக்கு இதமாக இருந்தாலும் இவ்வாறு தூங்குவது பல்வேறு உடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அப்படி என்ன என்ன பிரச்சனைகள் வரும் என்பதை இந்த பதிவில் காண்போம்.
தொண்டை வறட்சி :
முகத்தை போர்வையால் மூடிக்கொண்டு தூங்கும்போது போர்வை வழியாக வரும் காற்றை சுவாசிப்பதன் மூலம் தொண்டை பகுதியில் ஈரப்பதம் குறைந்து தொண்டை வறட்சியை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: ஆபத்தை தரும், தொடர் இருமல்.. புற்றுநோய் அபாயம்.. உஷார்.. இல்லன்னா உயிருக்கே ஆபத்து.!
சருமம் மற்றும் நுரையீரலை பாதிக்கும் :
போர்வையால் முகத்தை மூடிய நிலையில் தூங்குவதால் போர்வைக்குள் இருக்கும் காற்று வெளியே செல்லாது. அந்த காற்றை நாம் சுவாசிக்கும் போது சருமத்தில் சுருக்கம், சரும பொலிவு குறைபாடு மற்றும் பருக்கள் போன்ற விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், இவ்வாறு தூங்குவதால் நுரையீரலில் காற்று போதுமான அளவு பரிமாறப்படாமல் நுரையீரல் சுருக்கம் அடைய வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல், ஆஸ்துமா உள்ளவர்கள் இவ்வாறு முகத்தை மூடிய நிலையில் தூங்கினால் ஆஸ்துமா மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
உடல் சோர்வு மற்றும் முடி கொட்டும் பிரச்சனை :
போர்வையால் முகத்தை மூடிய நிலையில் தூங்குவதால் ஆக்சிஜன் குறைந்து தலைவலியை ஏற்படுத்தும். இதனால், உடல் சோர்வு ஏற்படும். அதுமட்டுமல்லாமல், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
மூச்சு திணறல் மற்றும் மூளை பாதிப்பை ஏற்படுத்தும் :
முகத்தை மூடிய நிலையில் தூங்கும்போது ஆக்சிஜன் படிப்படியாக குறைந்து மூச்சு திணறல் பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும், இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் உடலில் அனைத்து பகுதியிலும் சரியாக இரத்தம் பாயாது. அதுமட்டுமல்லாமல், உடலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் மாரடைப்பு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தூங்குவதன் விளைவாக மூளை பாதிப்புகள் வர அதிக வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: மூட்டு வலிக்கு பற்கள் கூட காரணமாக இருக்குமா.?! எப்படி தெரியுமா.?! உஷார்.!