குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
அர்ச்சனாவை கடுமையாக விளாசிய நடிகர் கமல்! என்னதான் நடந்தது? வைரலாகும் வீடியோ!
விஜய் தொலைக்காட்சியில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஆகிய 6 பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த வாரம் டபுள் எவிக்சனில் ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். இந்நிலையில் இந்த வாரம் துவக்கத்திலேயே ஓபன் நாமினேஷன் நடைபெற்று ஆரி, ரியோ, அர்ச்சனா, ஷிவானி, ஆஜித், அனிதா, சோம் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.
இவ்வாறு விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும்நிலையில் வாரஇறுதியான இன்று நடிகர் கமல் போட்டியாளர்களை சந்தித்து பேச உள்ளார். மேலும் நடிகர் கமல் அர்ச்சனாவிடம் கேள்வி எழுப்பி கடுமையாக விளாசியுள்ளார். இந்த ப்ரமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.