96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அடக்கடவுளே.. இப்படியொரு தடாலடி தண்டனையா.! பிக்பாஸ் போட்ட ஆர்டர்.! ஆடிப்போன போட்டியாளர்கள்! வைரல் வீடியோ!!
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஒவ்வொரு நாளும் வித்தியாசமான டாஸ்க்களுடன் போட்டியாளர்களை மோத வைத்து சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 7. உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் யுகேந்திரன், பிரதீப் ஆண்டனி, பாவா செல்லதுரை, நிக்ஷன், சரவண விக்ரம், கூல் சுரேஷ், விஷ்ணு, விஜய் வர்மா, மணி சந்திரா, விசித்ரா, ஜோவிகா, மாயா, அனன்யா ராவ், வினுஷா,
பூர்ணிமா ரவி, ரவீனா உள்ளிட்டோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
இதில் முதல் வாரத்தில் அனன்யா போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்ட நிலையில், குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பவா செல்லத்துரை தன்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியவில்லை எனக் கூறி அவராகவே வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் அனல் பறக்க சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
அதில் பிக்பாஸ் வித்தியாசமான டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தோல்வி அடைந்தவர்களுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக போட்டியில் தோற்றவர்கள் பிக்பாஸ் வீட்டில் சமைக்கும் உணவுகளை சாப்பிடக்கூடாது என அறிவித்துள்ளார். இது போட்டியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.