குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
பிக்பாஸ் கொடுத்த வாய்ப்பு! நிரூப்பின் செயலால் வீட்டைவிட்டு வெளியேறவும் தயாரான பெண் போட்டியாளர்! பரபரப்பு வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பிக்பாஸ் சீசன் 5 நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், மோதலுடனும் சென்று கொண்டுள்ளது. 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறங்கிய நிலையில், திருநங்கையான நமிதா தவிர்க்க முடியாத காரணங்களால் ஒரு சில நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
அவரை தொடர்ந்து நாடியா சாங் மற்றும் அபிஷேக் ஆகியோர் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டிருந்த நிலையில், குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் கடந்த வாரம் நாட்டுப்புற பாடகி சின்னப் பொண்ணு வீட்டை விட்டு வெளியேறினார். இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்றும் ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
அதாவது இன்று, நிலம் காயினை தன்வசம் வைத்திருக்கும் நிரூப் வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளலாம், மேலும் வீட்டில் உள்ள பெண் யாரையாவது தனது உதவியாளராக அறிவிக்க வேண்டும் என பிக்பாஸ் டாஸ்க் கொடுத்துள்ளார்.
அதற்கு நிரூப் அக்ஷராவின் பெயரை கூறுகிறார். ஆனால் அக்ஷரா அதில் எனக்கு விருப்பமில்லை எனவும், இல்லையென்றால் வீட்டை விட்டு செல்லவும் தயார் என்பது போல பேசுகிறார். அதற்கு நிரூப் அவ முதலில் இருந்தே இதையே சொல்லிக் கொண்டு இருக்கிறாள். நீங்க வீட்டுகுள்ளேயே வைச்சுட்டு இருக்கீங்க என தெரிவிக்கிறார். உடனே ராஜு வரும் வாரம் தீபாவளி பிரச்சனையை பாருங்கள். கொண்டாடுங்கள் என நக்கலாக கூறிவிட்டு செல்கிறார். இந்த பரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.