96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
இதைதானே எதிர்பார்த்தோம்.. பிக்பாஸ் கொடுத்த ஜாக்பாட் வாய்ப்பு! வெளியேறப்போவது யார்?? பரபரப்பு வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி ஆரம்பமாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று மிகவும் விறுவிறுப்பாக, வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். காரச்சாரமாக, அனல் பறக்க சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி இதுவரை 91 நாட்களைக் கடந்து சென்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா, யுகேந்திரன், அன்ன பாரதி, ஐஷூ, கானா பாலா, பிராவோ, அக்ஷயா, ஜோவிகா, கூல் சுரேஷ், சரவண விக்ரம் மற்றும் கடந்த வாரம் நிக்க்ஷன் மற்றும் ரவீனா ஆகியோர் வெளியேறியுள்ளனர். மேலும் போட்டியாளரான பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார். இதுவரை 16 போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில் வெற்றி பெறப்போவது யார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் பெரிதும் எதிர்பார்த்த பணப்பெட்டி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளது. அதில் துவக்கத்தில் ஒரு லட்சம் ரூபாய் பணப்பெட்டியில் வைக்கப்பட்டு இருந்தது. அதனை எவரும் எடுக்காத நிலையில் தொகை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் எந்த போட்டியாளர் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பு போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக நிலவி வருகிறது.