96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
எல்லை மீறும் சண்டைகள்.! கட்டி உருளும் போட்டியாளர்கள்.! அனல் பறக்கும் பிக்பாஸ் வீடு.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கி மிகவும் விறுவிறுப்பாகவும், சண்டை, சச்சரவு என அனல் பறக்க சென்று கொண்டிருக்கிறது. இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் முதல் வாரத்தில் அனன்யா நாமினேட் ஆனநிலையில் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார். அவரைத் தொடர்ந்து எழுத்தாளரான பவா செல்லத்துரை உடல்நிலை சரியில்லாத காரணத்தாலும், தனக்கு பிக்பாஸ் வீட்டில் இருக்க பிடிக்கவில்லை என கூறி தானாகவே வெளியேறினார். இந்த வாரத்திற்கான தலைவராக யுகேந்திரன் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான முதல் ப்ரமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் போட்டியாளர்களுக்கிடையே பயங்கரமான புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. டாஸ்கை முடிப்பதற்காக போட்டியாளர்கள் சக போட்டியாளர்களுடன் அடித்து உருளுகின்றனர். மேலும் விஜய் மற்றும் விஷ்ணுகிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாகும் நிலை வரை சென்றுள்ளது.