96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அட.. வேற லெவல் டாஸ்க்.!! அனல் பறக்க ஆரம்பமான போட்டியாளர்களின் ஆட்டம்.! வைரல் வீடியோ!!
பிரபல தொலைக்காட்சியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் துவக்கத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஐந்து பிரபலங்கள் வைல்ட் கார்டு எண்ட்ரியில் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாகவும், காரச்சாரமாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சி 45 நாட்களை கடந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியிலிருந்து அனன்யா, ப விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்ன பாரதி மற்றும் கடந்த வாரம் ஐஷூ ஆகியோர் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினர். பாவா செல்லதுரை தானாக உடல் நிலையை காரணம் காட்டி வீட்டை விட்டு வெளியேறினார். மேலும் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார்.
இந்நிலையில் இந்த வாரம் தினேஷ் வீட்டின் கேப்டனாக உள்ளார். மேலும் பிக்பாஸ் புதிய டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளது. அதன்படி ஆண்கள் பெண்ணாகவும், பெண்கள் ஆணாகவும் மாறி டாஸ்க்கை செய்து வருகின்றனர். ஒவ்வொரு போட்டியாளர்களும் வேற லெவலில் விளையாடி நிகழ்ச்சியே பரபரப்பாகியுள்ளது. இதுகுறித்த பிரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.