96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
இனிமேல் அப்படியே கூப்பிடுங்க.! கண்கலங்கிய விசித்ரா! உடனே பூர்ணிமா, மாயா செய்த காரியத்தை பார்த்தீர்களா!!
பிரபல விஜய் தொலைக்காட்சியில் கடந்த மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி 45 நாட்கள் கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் வீட்டின் தலைவராக தினேஷ் உள்ளார். மேலும் ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க்குகளால் வீடே கலவர பூமியாக மாறியுள்ளது.
இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் விசித்ரா போட்டியாளர்கள் முன், நான் அம்மாவாக நடிக்கவில்லை, என்னால் அப்படி நடிக்கவும் முடியாது, இங்கு பார்க்கும்போது எனது பிள்ளைகளை பார்ப்பது போல உள்ளது. அதை கிண்டல் பண்ணி, சீப்பா, டிராமா என பேசுவது எனது மனதை மிகவும் கஷ்டபடுத்துகிறது. அதனால் இனிமேல் என்னை விசித்ரா மேம் என கூப்பிடுங்கள், நான் மரியாதையை எதிர்பார்க்கிறேன்.
50 வயதில் நிறைய பேர் எதுவுமே இல்லாமல் இருக்கிறார்கள். இப்போ நான் அதை விட்டுக் கொடுத்தால் இது தவறான உதாரணமாக வெளியே போகும் என கண்கலங்கியவாறே கூறுகிறார். அதற்கு பூர்ணிமா,"விசித்ரா மேம் நீங்களும் இனிமேல் என்னை பூர்ணிமா மேம் என கூப்பிடுங்கள்" என்று கூற உடனே மாயாவும் ’எனக்கும் நீங்கள் மரியாதை கொடுங்கள் விசித்ரா மேம்’ என்று கிண்டலாக கூறியுள்ளார். அந்த ப்ரமோ வைரலாகி வருகிறது.
#Day45 #Promo3 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) November 15, 2023
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/ThK4QXlvqN