குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
அடக்கொடுமையே.. பாத்ரூம் போகணும்னு சொன்ன ஜி.பி முத்துவின் பரிதாப நிலையை பார்த்தீங்களா.! வைரலாகும் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து கொண்டிருந்த பிக்பாஸ் 6வது சீசன் கடந்த ஞாயிறு பிரம்மாண்டமாக ஆரம்பமானது. இந்த சீசனையும் உலக நாயகன் கமல் தொகுத்து வழங்குகிறார்.
இந்த சீசனில் ஜிபி முத்து, அசீம், அசல், ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ஷெரினா, ஏடிகே, ஆயிஷா, மணிகண்டன், ரக்ஷிதா, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், நடன இயக்குனர் சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவா, தனலட்சுமி ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இன்றைய நாளிற்கான ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் 4 அணிகளாக பிரிந்துள்ளனர். அதில் சமையலறையில் வேலை செய்பவர்கள் மற்றவர்களுக்கு ஊட்டிவிடவும், பாத்ரூம் சுத்தம் செய்பவர்கள், பாத்ரூம் செல்ல நினைப்பவர்களை சிகப்பு கம்பளம் விரித்து அழைத்து செல்லவேண்டும் என டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதில் ஜி.பி முத்து தான் பாத்ரூம் செல்ல வேண்டும் என கூறியதும் போட்டியாளர்கள் அவரை அலேக்காக தூக்கி பாத்ரூம் உள்ளே வரை கொண்டு சென்றுள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.