96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பிரபல நடிகையுடன் மிக நெருக்கமாக போஸ் கொடுத்துள்ள பிக்பாஸ் பாலாஜி.! வைரலாகும் புகைப்படம்
பிரபல நடிகை வாணிபோஜனுடன் பிக்பாஸ் புகழ் பாலாஜி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் சீசன் நான்கில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் பாலாஜி. பிக்பாஸ் வீட்டில் இவர் கொஞ்சம் ஓவராகவே பேசி வருவதால் பலரும் அவரை திட்ட தொடங்கியுள்ளன்னர்.
மேலும் வழக்கான சீசன்கள் போல் இந்த சீசனிலும் லவ் ட்ராக்கை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் , பாலாஜி - ஷிவானி இடையிலான லவ் ட்ராக் தற்போதுதான் சற்று சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதனிடையே பாலாஜியின் பழைய புகைப்படம் மற்றும் வீடியோக்களை தேடி கண்டுபிடித்து ரசிகர்கள் தற்போது வைரலாக்கிவருகின்றனர்.
முன்னதாக பாலாஜி நட்சத்திர ஹோட்டலில் பீரை தன் மேல் ஊற்றி குளிப்பது, நீச்சத்தில் குளத்தில் அரைகுற உடையில் இருக்கும் இளம்பெண் ஒருவரை அலேக்காக தன் கையாலேயே தூக்கி உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோக்கள் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் பாலாஜி பிரபல நடிகை வாணி போஜனுடன் மிக நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் புதிதாக வைரலாக தொடங்கியுள்ளது.