குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
காலில் விழுந்த லாஷ்லியா! அசிங்கப்படுத்திய தந்தை! சோகத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள்.
பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஒவொரு சீசனிலும் இறுதியில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் உறவினர்களை வீட்டிற்குள் அழைத்து வந்து சர்ப்ரைஸ் கொடுப்பது வழக்கம். அந்த வகையில் இந்த சீசனில் நேற்று முகெனின் அம்மா மற்றும் தங்கை இருவரும் வந்தனர்.
இன்றைய நிகழ்ச்சியில் லாஷ்லியாவின் தந்தை வந்துள்ளார். லாஷ்லியா தனது தந்தையை பார்த்து 10 வருடத்திற்கும் மேல் ஆகிவிட்டதாக கூறியிருந்தார். இதனால் லாஷ்லியாவின் தந்தையை பிக்பாஸ் கூட்டிவருவாரா என அனைவரும் ஆவலுடன் எதிர்பாராத நிலையில் இன்று அந்த ஏக்கத்தை நிறைவேற்றியுள்ளார் பிக்பாஸ்.
இந்நிலையில் 10 வருடம் கழித்து தனது தந்தையை பார்த்ததும் கதறி அழுது அவரது காலில் விழுகிறார் லாஷ்லியா. ஆனால், வந்ததும் வராததுமாக அனைவர் முன்பும் லாஷ்லியாவை நிக்கவைத்து நீ என்ன சொல்லிவிட்டு இங்கு வந்தாய்? ஆனால் என்ன செய்துகொண்டிருக்கிறார் என கோவமாக கேட்கிறார்.
அவரை சமாதானம் செய்து சேரன் உள்ளே அழைத்துச்செல்ல முயற்சிக்கிறார். ஆனால், அவர் மீண்டும் லாஷ்லியாவிடம் வந்து எல்லோரும் பார்த்து காறி துப்பும் அளவுக்கு ஆகிவிட்டது, எல்லாத்தையும் தூக்கி போட்டுவிட்டு உள்ளே வா என கோவத்தின் உச்சத்தில் பேசுகிறார் லாஷ்லியாவின் தந்தை.
லாஷ்லியா - கவின் இடையே நடக்கும் காதல் குறித்துதான் லாஷ்லியாவின் தந்தை இவ்வளவு கோவமாக பேசுவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.
#Day80 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/E6ue8NYw1m
— Vijay Television (@vijaytelevision) September 11, 2019
#Day80 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/C80faXVdys
— Vijay Television (@vijaytelevision) September 11, 2019