லாஷ்லியாவுக்கு மட்டும் இல்லாமல் ரசிகர்களுக்கும் சேர்த்து சர்ப்ரைஸ் கொடுத்த பிக்பாஸ்! என்ன தெரியுமா?



Bigg boss lashliya family entry season 3

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 80 நாட்களை கடந்துள்ள சீசன் 3 இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவுக்கு வர உள்ளது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர். இந்த முறை பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி போட்டியாளர் யார் என தெரிந்துகொள்ள அனைவரும் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் மற்ற சீசன்களை போல இந்த சீசனிலும் போட்டியாளர்களை பார்க்க அவரது குடும்பத்தினர் வருகை தர தொடங்கியுள்ளனர். அந்த வகையில் இன்று லாஷ்லியாவின் குடும்பம் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்னனர். இன்று வெளியான ப்ரோமோக்களில் லாஷ்லியாவின் தந்தை மட்டுமே வந்திருப்பதுபோலவும் அவர் லாஷ்லியவை திட்டுவது போலவும் ப்ரோமோ வெளியாகியிருந்தது.

bigg boss tamil

ஆனால், லாஷ்லியாவின் தந்தை மட்டும் இல்லாது அவரது தாய், இரண்டு சகோதரிகள் உட்பட மொத்த குடும்பமும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளனர். ப்ரோமோவில் தந்தையை மட்டுமே காட்டிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினரையும் காட்டி லாஷ்லியாவுக்கு மட்டும் இல்லாமல் பார்வையாளர்களுக்கும் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.